Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:45 — விவரிக்கப்பட்டது

மோஸஸிற்கு நாம் வேதத்தைக் கொடுத்திருந் தோம், மேலும் அதுவும் தர்க்கிக்கப்பட்டது. உம்முடைய இரட்சகரின் முன்னரே தீர்மானிக்கப் பட்ட முடிவு இல்லாதிருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார்கள். உண்மையில், அவர்கள் மிகவும் அதிகமான சந்தேகங்களைக் கொன்டிருந்தனர்.

[41:44] அரபி மொழி அல்லாத குர்ஆனாக நாம் இதனை ஆக்கியிருப்போமாயின், அவர்கள், “ஏன் அந்த மொழியில் இது இறங்கி வந்தது?” என்று கூறியிருப்பார்கள். அது அரபி மொழியோ அல்லது அரபி மொழி அல்லாததோ, “நம்பிக்கை கொண்டவர்களுக்கு, இது ஒரு வழிகாட்டலும் மேலும் நிவாரணமும் ஆகும். நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மிகத் தொலைவி லிருந்து சொற்பொழிவாற்றுவது போன்று, இதன் பால் அவர்கள் செவிடர்களாகவும் மற்றும் குருடர் களாகவும் இருப்பார்கள்” என்று கூறுவீராக.

[41:46] நன்னெறியான காரியங்கள் புரிகின்ற எவராயினும், தன் சொந்த நலனிற்காகவே அவ்வாறு செய் கின்றார், மேலும் தீமைகளைப் புரிகின்ற எவராயினும் தனக்கே கேடாகத்தான் அவ்வாறு செய்கின்றார். உம்முடைய இரட்சகர் ஒரு போதும் மக்களின்பால் அநீதி இழைப்பவர் அல்ல.