Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:44 — விவரிக்கப்பட்டது

அரபி மொழி அல்லாத குர்ஆனாக நாம் இதனை ஆக்கியிருப்போமாயின், அவர்கள், “ஏன் அந்த மொழியில் இது இறங்கி வந்தது?” என்று கூறியிருப்பார்கள். அது அரபி மொழியோ அல்லது அரபி மொழி அல்லாததோ, “நம்பிக்கை கொண்டவர்களுக்கு, இது ஒரு வழிகாட்டலும் மேலும் நிவாரணமும் ஆகும். நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மிகத் தொலைவி லிருந்து சொற்பொழிவாற்றுவது போன்று, இதன் பால் அவர்கள் செவிடர்களாகவும் மற்றும் குருடர் களாகவும் இருப்பார்கள்” என்று கூறுவீராக.

[41:43] முந்திய தூதர்களுக்கு என்ன கூறப்பட்டதோ அதுவே, மிகச் சரியாக உமக்கும் கூறப் பட்டுள்ளது. உம்முடைய இரட்சகரிடம் மன்னிப்பு உள்ளது, அத்துடன் அவரிடம் வலி நிறைந்த தண்டனையும் உள்ளது.

[41:45] மோஸஸிற்கு நாம் வேதத்தைக் கொடுத்திருந் தோம், மேலும் அதுவும் தர்க்கிக்கப்பட்டது. உம்முடைய இரட்சகரின் முன்னரே தீர்மானிக்கப் பட்ட முடிவு இல்லாதிருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார்கள். உண்மையில், அவர்கள் மிகவும் அதிகமான சந்தேகங்களைக் கொன்டிருந்தனர்.