குர்ஆன் 41:51 — விவரிக்கப்பட்டது
மனிதனுக்கு நாம் அருள்புரியும் போது, அவன் திரும்பிச் செல்கின்றான், மேலும் தூரத்திலும் தூரமாகத் தள்ளிச் சென்று விடுகின்றான், மேலும் அவன் ஏதேனும் துன்பத்தை அனுபவிக்கும்போது, அவன் உரத்த குரலில் இறைஞ்சிப் பிரார்த்திக் கின்றான்.
[41:50] மேலும், சில துன்பங்களை அனுபவித்த பின்னர் அவனுக்கு நாம் அருள்புரிந்தால், அவன், “இது எனக்குரியதே ஆகும். அந்த நேரம் எப்பொழுதேனும் நிகழ்ந்தேறும் என்று நான் நம்பவில்லை. என் இரட்சகரிடம் நான் திரும்பிச் சென்றாலும் கூட, அவரிடமும் நான் மேலான வற்றையே அடைவேன்” என்று கூறுகின்றான். மிகவும் உறுதியாக, நம்ப மறுப்பவர்களுக்கு அவர்களுடைய அனைத்துக் காரியங்களைப் பற்றியும் நாம் தெரிவிப்போம், மேலும் கடுமையான தண்டனைக்கு அவர்களை உட்படுத்துவோம்.
[41:52] பிரகடனம் செய்வீராக: “இது மெய்யாகவே கடவுள்-இடமிருந்து வந்ததாக இருந்து, பின்னர் அதனை நீங்கள் ஏற்க மறுப்பதென முடிவு செய்து விட்டால்? இதனை எதிர்ப்பதென முடிவெடுத்து விட்டவர்களை விட வழிகேட்டில் வெகு தூரம் இருப்பவர்கள் யார்?”