Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:14 — கலந்தாலோசித்தல்

நேர்மாறாக, அவர்களிடம் அறிவு வந்ததற்குப் பின்னர்தான் தங்களுக்கிடையே பொறாமை மற்றும் கடும் கோபத்தின் காரணமாக, அவர்கள் பிரிவுகளாக உடைந்து போனார்கள். வரையறுக்கப் பட்டதொரு தவணைவரை அவர்களுக்கு அவகாசமளிப்பதென, உம் இரட்சகரிடமிருந்து முன்னரே நிர்ணயிக்கப்பட்டதொரு தீர்மானம் இல்லாதிருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார்கள். உண்மையில், வேதத்திற்கு வாரிசுகளான பிந்திய தலை முறையினர், முற்றிலும் சந்தேகத்துடனே இருக் கின்றனர்.

[42:13] நோவாவிற்கு விதிக்கப்பட்ட அதே மார்க்கத்தைத் தான் அவர் உங்களுக்கும் விதித்துள்ளார், மேலும் நாம் உமக்கு உள்ளுணர்வளித்ததும், மேலும் ஆப்ரஹாம், மோஸஸ் மற்றும் இயேசுவிற்கும் விதித்ததுமாவது: “இந்த ஒரு மார்க்கத்தை நீங்கள் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் அதனைப் பிரித்து விடாதீர்கள்” என்பதே.அவர்கள் எதனைச் செய்ய வேண்டுமென்று நீர் அழைக்கின்றீரோ அதன்பால் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள் பெரும் கோபம் அடைவார்கள். தான் நாடுகின்ற எவரையும் கடவுள் தன்பால் மீட்டுக் கொள்கின்றார்; முற்றிலும் அடிபணிந்தவர்களை மட்டுமே அவர் தன்பால் வழிநடத்துகின்றார்.

[42:15] இதனைத்தான் நீர் பிரச்சாரம் செய்ய வேண்டும், மேலும் நீர் செய்துவர வேண்டு மென உமக்கு கட்டளையிடப்பட்டவற்றை உறுதிப்பாட்டுடன் கடைப்பிடிப்பீராக, மேலும் அவர்களுடைய விருப்பங்களைப் பின் பற்றாதீர். மேலும்: “கடவுள்-ஆல் இறக்கி அனுப்பப்பட்ட அனைத்து வேதங்களின் மீதும் நான் நம்பிக்கை கொள்கின்றேன். உங்களுக் கிடையில் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டு மென நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். கடவுள் தான் எங்களுடைய இரட்சகரும் மேலும் உங்களுடைய இரட்சகருமாவார். எங்களுடைய செயல்கள் எங்களுக்கு, மேலும் உங்களுடைய செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் எந்தத் தர்க்கமும் இல்லை. கடவுள் நம் அனை வரையும் சேர்த்து ஒன்றாகத் திரட்டுவார்; இறுதி விதி அவரிடமே உள்ளது” என்று பிரகடனம் செய்வீராக.