குர்ஆன் 42:13 — கலந்தாலோசித்தல்
நோவாவிற்கு விதிக்கப்பட்ட அதே மார்க்கத்தைத் தான் அவர் உங்களுக்கும் விதித்துள்ளார், மேலும் நாம் உமக்கு உள்ளுணர்வளித்ததும், மேலும் ஆப்ரஹாம், மோஸஸ் மற்றும் இயேசுவிற்கும் விதித்ததுமாவது: “இந்த ஒரு மார்க்கத்தை நீங்கள் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் அதனைப் பிரித்து விடாதீர்கள்” என்பதே.அவர்கள் எதனைச் செய்ய வேண்டுமென்று நீர் அழைக்கின்றீரோ அதன்பால் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள் பெரும் கோபம் அடைவார்கள். தான் நாடுகின்ற எவரையும் கடவுள் தன்பால் மீட்டுக் கொள்கின்றார்; முற்றிலும் அடிபணிந்தவர்களை மட்டுமே அவர் தன்பால் வழிநடத்துகின்றார்.
[42:12] வானங்கள் மற்றும் பூமியின் பரிபூரணமாக கட்டுப்பாடு அவருக்கே உரியது. தான் நாடுகின்ற எவருக்கும் வாழ்வாதாரங்களை அதிகரிப்பதோ, அல்லது குறைப்பதோ அவர்தான். அனைத்து விஷயங்களையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[42:14] நேர்மாறாக, அவர்களிடம் அறிவு வந்ததற்குப் பின்னர்தான் தங்களுக்கிடையே பொறாமை மற்றும் கடும் கோபத்தின் காரணமாக, அவர்கள் பிரிவுகளாக உடைந்து போனார்கள். வரையறுக்கப் பட்டதொரு தவணைவரை அவர்களுக்கு அவகாசமளிப்பதென, உம் இரட்சகரிடமிருந்து முன்னரே நிர்ணயிக்கப்பட்டதொரு தீர்மானம் இல்லாதிருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார்கள். உண்மையில், வேதத்திற்கு வாரிசுகளான பிந்திய தலை முறையினர், முற்றிலும் சந்தேகத்துடனே இருக் கின்றனர்.