குர்ஆன் 42:12 — கலந்தாலோசித்தல்
வானங்கள் மற்றும் பூமியின் பரிபூரணமாக கட்டுப்பாடு அவருக்கே உரியது. தான் நாடுகின்ற எவருக்கும் வாழ்வாதாரங்களை அதிகரிப்பதோ, அல்லது குறைப்பதோ அவர்தான். அனைத்து விஷயங்களையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[42:11] வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவர். உங்களிலிருந்தே வாழ்க்கைத் துணைகளை அவர் உங்களுக்காக படைத்தார்-மேலும் அத்துடன் விலங்குகளுக்காகவும். இவ்விதமாக அவர் பெருகுவதற்கான வழிமுறைகளை உங்களுக்கு வழங்குகின்றார். அவருக்கு நிகராக எந்த ஒன்றும் இல்லை. அவர்தான் செவியேற்பவர், பார்ப்பவர்.
[42:13] நோவாவிற்கு விதிக்கப்பட்ட அதே மார்க்கத்தைத் தான் அவர் உங்களுக்கும் விதித்துள்ளார், மேலும் நாம் உமக்கு உள்ளுணர்வளித்ததும், மேலும் ஆப்ரஹாம், மோஸஸ் மற்றும் இயேசுவிற்கும் விதித்ததுமாவது: “இந்த ஒரு மார்க்கத்தை நீங்கள் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் அதனைப் பிரித்து விடாதீர்கள்” என்பதே.அவர்கள் எதனைச் செய்ய வேண்டுமென்று நீர் அழைக்கின்றீரோ அதன்பால் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள் பெரும் கோபம் அடைவார்கள். தான் நாடுகின்ற எவரையும் கடவுள் தன்பால் மீட்டுக் கொள்கின்றார்; முற்றிலும் அடிபணிந்தவர்களை மட்டுமே அவர் தன்பால் வழிநடத்துகின்றார்.