குர்ஆன் 42:11 — கலந்தாலோசித்தல்
வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவர். உங்களிலிருந்தே வாழ்க்கைத் துணைகளை அவர் உங்களுக்காக படைத்தார்-மேலும் அத்துடன் விலங்குகளுக்காகவும். இவ்விதமாக அவர் பெருகுவதற்கான வழிமுறைகளை உங்களுக்கு வழங்குகின்றார். அவருக்கு நிகராக எந்த ஒன்றும் இல்லை. அவர்தான் செவியேற்பவர், பார்ப்பவர்.
[42:10] இத்தூதுச்செய்தியின் எந்தப்பகுதியிலேனும் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால், இவ்வாறு செய்வதற்குரிய தீர்ப்பு கடவுள்-இடமே உள்ளது. என் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர். அவர் மீது நான் பொறுப்பேற்படுத்துகின்றேன், மேலும் அவருக்கே நான் அடிபணிகின்றேன்.
[42:12] வானங்கள் மற்றும் பூமியின் பரிபூரணமாக கட்டுப்பாடு அவருக்கே உரியது. தான் நாடுகின்ற எவருக்கும் வாழ்வாதாரங்களை அதிகரிப்பதோ, அல்லது குறைப்பதோ அவர்தான். அனைத்து விஷயங்களையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.