Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:10 — கலந்தாலோசித்தல்

இத்தூதுச்செய்தியின் எந்தப்பகுதியிலேனும் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால், இவ்வாறு செய்வதற்குரிய தீர்ப்பு கடவுள்-இடமே உள்ளது. என் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர். அவர் மீது நான் பொறுப்பேற்படுத்துகின்றேன், மேலும் அவருக்கே நான் அடிபணிகின்றேன்.

[42:9] அவருடன் வேறு இரட்சகர்களை அவர்கள் கண்டு விட்டனரா? கடவுள் தான் ஒரே இரட்சகரும் மேலும் எஜமானரும் ஆவார். அவர்தான் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புகின்றார், மேலும் அவர் தான் சர்வ சக்தியுடையவர்.

[42:11] வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவர். உங்களிலிருந்தே வாழ்க்கைத் துணைகளை அவர் உங்களுக்காக படைத்தார்-மேலும் அத்துடன் விலங்குகளுக்காகவும். இவ்விதமாக அவர் பெருகுவதற்கான வழிமுறைகளை உங்களுக்கு வழங்குகின்றார். அவருக்கு நிகராக எந்த ஒன்றும் இல்லை. அவர்தான் செவியேற்பவர், பார்ப்பவர்.