Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:27 — கலந்தாலோசித்தல்

கடவுள் தன்னுடைய அடியார்களுக்கு வாழ்வாதாரங்களை அதிகரித்தால், பூமியில் அவர்கள் வரம்பு மீறலைச் செய்வார்கள். இதன் காரணமாகவே அவர் தான் நாடுகின்றோருக்கு மிகச் சரியாக அளவிட்டு அதனை அனுப்பு கின்றார். தன்னுடைய அடியார்களை அவர் முற்றிலும் நன்கறிந்தவராகவும் மேலும் பார்ப்பவராகவும் இருக்கின்றார்.

[42:26] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்கள் தான் அவருக்கு மறுமொழி அளிக்கின்றனர். தன்னுடைய அருட்கொடைகளை அவர்கள் மீது அவர் பொழிவார். நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கடுமையானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

[42:28] அவர்தான் அவர்கள் விரக்தியுற்ற பின்னர் மழையை இறக்கி அனுப்புகின்றவர், மேலும் தன் கருணையைப் பரப்புகின்றார். அவர்தான் ஒரே எஜமானர், மிகுந்த புகழுக்குரியவர்.