குர்ஆன் 42:36 — கலந்தாலோசித்தல்
உங்களுக்குக் கொடுக்கப்பட்டது எதுவா யினும், அது இவ்வுலகின் தற்காலிகப் பொருள் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நம்பிக்கை கொண்டு மேலும் தங்கள் இரட்சகர் மீது பொறுப்பேற்படுத்துபவர்களுக்கு, கடவுள் வசம் இருப்பவை மிகவும் மேலானதும் நிலைத் திருப்பதுமாகும்.
[42:35] நம்முடைய சான்றுகளுக்கெதிராக வாதிடு பவர்கள் தங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதைக் கண்டு கொள்வார்கள்.
[42:37] அவர்கள் பெரும் பாவங்களையும் மற்றும் ஒழுக்கக்கேட்டையும் தவிர்த்துக் கொள் வார்கள்,மேலும் அவர்கள் கோபப்படும்போது மன்னித்து விடுவார்கள்.