குர்ஆன் 42:38 — கலந்தாலோசித்தல்
தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிப்பதன் மூலம் தங்களுடைய இரட்சகருக்கு அவர்கள் மறுமொழியளிக்கின்றனர். அவர்களு டைய காரியங்கள்அவர்களுக்கிடையில் உரிய கலந்தாலோசனைக்குப் பின்னர் தீர்மானிக்கப் படுகின்றன, மேலும் நம்முடைய வாழ்வாதாரங் களில் அவர்களுக்கு உரியதில் இருந்து அவர்கள் (தர்மம்) கொடுப்பார்கள்.
[42:37] அவர்கள் பெரும் பாவங்களையும் மற்றும் ஒழுக்கக்கேட்டையும் தவிர்த்துக் கொள் வார்கள்,மேலும் அவர்கள் கோபப்படும்போது மன்னித்து விடுவார்கள்.
[42:39] அவர்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைக்கப் பட்டால், அவர்கள் தங்களுடைய உரிமைகளுக் காக எழுந்து நிற்பார்கள்.