குர்ஆன் 42:41 — கலந்தாலோசித்தல்
நிச்சயமாக, தங்களுக்கு அநியாயம் நேரிடும் பொழுது, தங்களுடைய உரிமைகளுக்காக எழுந்து நிற்பவர்கள், எந்தக் குற்றமும் செய்து விடவில்லை.
[42:40] ஓர் அநியாயத்திற்குரிய, நியாயமான கைம்மாறு அதற்குச் சமமானதொரு தண்டனையாக இருப்பினும், பிழை பொறுத்துக் கொண்டு மேலும் நன்னெறியைப் பராமரிப்பவர்கள் கடவுள்-ஆல்வெகுமதியளிக்கப்படுகின்றனர். அநியாயக்காரர்களை அவர் நேசிப்பதில்லை.
[42:42] மக்களை அநீதமாக நடத்துவதுடன், மேலும் கோபமூட்டும் விஷயம் எதுவுமின்றி சண்டை யிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள். இவர்கள் வலிநிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.