குர்ஆன் 43:18 — ஆபரணங்கள்
(அவர்கள் கூறுகின்றனர்,) “அழகுடன் இருப்பதற்காக வளர்க்கப்படுவதும், மேலும் போர்களில் உதவி செய்ய முடியாததுமான ஒரு சந்ததியில் என்ன நன்மை இருக்கின்றது?”
[43:17] மிக்க அருளாளருக்கு அவர்கள் கூறியதுபோல, அவர்களில் ஒருவனுக்கு (ஒரு புதல்வியை பற்றிய) செய்தி கொடுக்கப்பட்ட போது, துக்கத்தாலும் மற்றும் கோபத்தாலும் அவன் முகம் இருண்டு விடுகின்றது!
[43:19] மிக்க அருளாளரின் அடியார்களான வானவர் கள் பெண்களாக இருக்கின்றனர் என்று அவர்கள் கூறினர்! அவர்களது படைப்பிற்கு இவர்கள் சாட்சிகளாக இருந்தனரா? அவர் களுடைய கூற்றுக்கள் பதிவு செய்யப்படு கின்றன, மேலும் அவர்கள் கேட்கப் படுவார்கள்.