குர்ஆன் 43:32 — ஆபரணங்கள்
இவர்களா உம்முடைய இரட்சகரின் கருணையை பங்கீடு செய்பவர்கள்? அவர்கள் ஒருவர் மற்றவருக்கு ஊழியம் செய்யும் பொருட்டு, அவர்களில் சிலரை மற்றவர்களை விட அந்தஸ்தில் உயர்த்தியவாறு, இவ்வுலகில் அவர்களுடைய பங்கை நாமே பங்கீடு செய்கின்றோம். உம்முடைய இரட்சகரின் கருணையானது அவர்கள் சேர்க்கக்கூடிய எந்தப் பொருளையும் விட மிகவும் மேலானதாகும்.
[43:31] அவர்கள், “(மக்கா அல்லது யத்ரிபின்) இரு சமூகங்களில் பிரபலமான வேறொரு மனிதர் மூலமாக மட்டும் இந்தக் குர்ஆன் இறக்கி அனுப்பப்பட்டிருந்தால்!” என்று கூறினார்கள்.
[43:33] எல்லா மக்களும் (நம்பமறுக்கின்ற) ஒரே கூட்டமாக ஆகிவிடக் கூடும் என்பது இல்லாதிருந்தால், மிக்க அருளாளரை நம்ப மறுக்கின்ற ஒவ்வொருவருக்கும் வெள்ளி யிலான கூரைகள், மற்றும் அவர்கள் ஏறிச் செல்லக் கூடிய படிகள் கொண்ட மாளிகை களை நாம் வழங்கியிருப்போம்.