குர்ஆன் 43:36 — ஆபரணங்கள்
எவனொருவன் மிக்க அருளாளரின் தூதுச் செய்தியை அலட்சியம் செய்கின்றானோ, அவனுடைய நிலையான கூட்டாளியாக இருப்பதற்கென ஒரு சாத்தானை நாம் நியமிக்கின்றோம்.*
[43:35] அத்துடன் ஏராளமான ஆபரணங்களும். இவை அனைத்தும் கீழான இந்த வாழ்வின் தற்காலிகப் பொருட்களேயாகும். மறுவுலகம் - உம் இரட்சகரிடம் இருப்பது - நன்னெறி யாளர்களுக்கு மிகவும் மேலானதாகும்.
[43:37] அத்தகைய கூட்டாளிகள் அவர்களை பாதையிலிருந்து திசை திருப்பி விடுவார்கள், இருப்பினும் தாங்கள் வழிகாட்டப்பட்டவர்களாகவே இருக்கின்றோம் என்று நம்பும்படி அவர்களை செய்து விடுவார்கள்.