குர்ஆன் 43:37 — ஆபரணங்கள்
அத்தகைய கூட்டாளிகள் அவர்களை பாதையிலிருந்து திசை திருப்பி விடுவார்கள், இருப்பினும் தாங்கள் வழிகாட்டப்பட்டவர்களாகவே இருக்கின்றோம் என்று நம்பும்படி அவர்களை செய்து விடுவார்கள்.
[43:36] எவனொருவன் மிக்க அருளாளரின் தூதுச் செய்தியை அலட்சியம் செய்கின்றானோ, அவனுடைய நிலையான கூட்டாளியாக இருப்பதற்கென ஒரு சாத்தானை நாம் நியமிக்கின்றோம்.*
[43:38] நம் முன்னால் அவன் வரும் பொழுது அவன், “ஐயோ, இரு கிழக்குகளைப்* போல் என்னிட மிருந்து நீ தூரமாக இருந்திருக்க வேண்டுமென நான் விரும்புகின்றேன். என்ன ஒரு துன்பகர மான கூட்டாளி!” என்று கூறுவான்.