குர்ஆன் 43:41 — ஆபரணங்கள்
அதற்கு முன்னர் நாம் உம்மை மரணிக்கச் செய்கின்றோமோ அல்லது, இல்லையோ நிச்சயமாக நாம் அவர்களைப் பழி தீர்ப்போம்.
[43:40] செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் இயலுமா; குருடர்களை, அல்லது வெகுதூரம் வழிகேட்டில் இருப்பவர்களை பார்க்கச் செய்ய உம்மால் இயலுமா?
[43:42] அல்லது, அவர்களுக்கு நாம் வாக்களித் துள்ளதை (தண்டனையை) உமக்குக் காட்டவும் கூடும். அவர்கள் மீது நாம் முழுமையான கட்டுப்பாட்டுடன் இருக்கின்றோம்.