குர்ஆன் 43:86 — ஆபரணங்கள்
அவருடன் அவர்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்கின்ற எவரும் பரிந்துரைப்பதற்கு எந்த அதிகாரத்தையும் பெற்றிருக்கவில்லை, அவர்களுடைய பரிந்துரை சத்தியத்துடன் ஒத்துப் போவதாகவும், மேலும் அவர்கள் முற்றிலும் அறிந்தவர்களாகவும் இருந்தாலே அன்றி.
[43:85] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றின் ஆட்சியதிகாரம் அனைத்தையும் சொந்தமாகக் கொண்டிருக்கின்ற அந்த ஒருவர் மிகவும் உயர்வானவர். அந்த நேரம் (உலகத்தின் முடிவு) பற்றிய அறிவு அவரிடமே உள்ளது, மேலும் அவரிடமே நீங்கள் திரும்புவீர்கள்.
[43:87] அவர்களைப் படைத்தது யாரென அவர்களிடம் நீர் கேட்பீராயின், அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். பின்னர் ஏன் அவர்கள் விலகிச் சென்றனர்?