குர்ஆன் 45:19 — மண்டியிடுதல்
கடவுள்-க்கெதிராக எவ்விதத்திலும் அவர்கள் உங்களுக்கு உதவ இயலாது. வரம்பு மீறுபவர் கள் தான் தங்களை ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாக்கிக் கொள்கின்றனர், அதே சமயம் கடவுள் தான் நன்னெறியாளர்களின் இரட்சகராக இருக்கின்றார்.
[45:18] பின்னர் சரியான சட்டங்களை நிலைநாட்டு வதற்காக உம்மை நாம் நியமித்தோம்; நீர் இதனைப் பின்பற்ற வேண்டும், மேலும் அறியாதவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.
[45:20] இது மக்களுக்கு ஞான உபதேசங்களையும், மேலும் உறுதியுடையவர்களுக்கு வழிகாட்டல், மற்றும் கருணையையும் வழங்குகின்றது.