குர்ஆன் 45:20 — மண்டியிடுதல்
இது மக்களுக்கு ஞான உபதேசங்களையும், மேலும் உறுதியுடையவர்களுக்கு வழிகாட்டல், மற்றும் கருணையையும் வழங்குகின்றது.
[45:19] கடவுள்-க்கெதிராக எவ்விதத்திலும் அவர்கள் உங்களுக்கு உதவ இயலாது. வரம்பு மீறுபவர் கள் தான் தங்களை ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாக்கிக் கொள்கின்றனர், அதே சமயம் கடவுள் தான் நன்னெறியாளர்களின் இரட்சகராக இருக்கின்றார்.
[45:21] தீய செயல்களைப் புரிபவர்கள், நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களை நடத்துவது போன்ற அதே விதமாக அவர்களையும் நாம் நடத்துவோம் என்று எதிர்பார்க்கின்றனரா? அவர்களுடைய வாழ்வும் மற்றும் அவர்களுடைய மரணமும் ஒரே மாதிரி இருக்க முடியுமா?* உண்மையில் அவர்களுடைய தீர்ப்பு தவறானதாக இருக்கின்றது.