குர்ஆன் 45:25 — மண்டியிடுதல்
நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம், தெளிவாக எடுத்துரைக்கப்பட்டால், அவர்களு டைய ஒரே வாதமாவது, “நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால், எங்கள் முன்னோர் களைக் கொண்டு வாருங்கள்” என்று கூறுவதாகவே இருந்தது.
[45:24] அவர்கள், “இந்த வாழ்வு மட்டுமே நாம் வாழ்கின்றோம்; நாம் வாழ்கின்றோம் மேலும் மரணிக்கின்றோம், மேலும் காலம்தான் நம்முடைய மரணத்திற்குக் காரணமா கின்றது!” என்று கூறினார்கள். இதனைப் பற்றிய உறுதியான அறிவு எதுவும் அவர்களுக்கு கிடையாது; அவர்கள் கற்பனை மட்டுமே செய்கின்றனர்.
[45:26] “கடவுள் உங்களுக்கு வாழ்வை வழங்கினார், பின்னர் அவர் உங்களை மரணத்தில் ஆழ்த்து கின்றார், பின்னர் தவிர்த்து விட முடியாதவாறு, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுகின்ற நாள் அன்று உங்களை அவர் ஒன்று கூட்டுவார். ஆனால் அதிகமான மக்கள் அறியமாட்டார் கள்” என்று கூறுவீராக.