குர்ஆன் 45:24 — மண்டியிடுதல்
அவர்கள், “இந்த வாழ்வு மட்டுமே நாம் வாழ்கின்றோம்; நாம் வாழ்கின்றோம் மேலும் மரணிக்கின்றோம், மேலும் காலம்தான் நம்முடைய மரணத்திற்குக் காரணமா கின்றது!” என்று கூறினார்கள். இதனைப் பற்றிய உறுதியான அறிவு எதுவும் அவர்களுக்கு கிடையாது; அவர்கள் கற்பனை மட்டுமே செய்கின்றனர்.
[45:23] தன்னுடைய அகந்தையையே தெய்வமாகக் கொண்ட ஒருவனை நீர் கவனித்திருக்கின்றீரா? அதன் விளைவாக, அவனுக்கு அறிவு இருந்த போதிலும், கடவுள் அவனை வழிகேட்டில் அனுப்பி, அவனுடைய செவிப்புலனிலும், அவனுடைய மனதிலும் முத்திரையிடுகின்றார், மேலும் அவனுடைய கண்களின் மீது ஒரு திரையை அமைத்து விடுகின்றார். கடவுள்-ன் இத்தகையதொரு தீர்மானத்திற்குப் பின், எவர் அவனை வழிநடத்த இயலும்? நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டீர்களா?
[45:25] நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம், தெளிவாக எடுத்துரைக்கப்பட்டால், அவர்களு டைய ஒரே வாதமாவது, “நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால், எங்கள் முன்னோர் களைக் கொண்டு வாருங்கள்” என்று கூறுவதாகவே இருந்தது.