Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 45:23 — மண்டியிடுதல்

أَفَرَءَيتَ مَنِ اتَّخَذَ إِلٰهَهُ هَوىٰهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلىٰ عِلمٍ وَخَتَمَ عَلىٰ سَمعِهِ وَقَلبِهِ وَجَعَلَ عَلىٰ بَصَرِهِ غِشٰوَةً فَمَن يَهديهِ مِن بَعدِ اللَّهِ ۚ أَفَلا تَذَكَّرونَ

தன்னுடைய அகந்தையையே தெய்வமாகக் கொண்ட ஒருவனை நீர் கவனித்திருக்கின்றீரா? அதன் விளைவாக, அவனுக்கு அறிவு இருந்த போதிலும், கடவுள் அவனை வழிகேட்டில் அனுப்பி, அவனுடைய செவிப்புலனிலும், அவனுடைய மனதிலும் முத்திரையிடுகின்றார், மேலும் அவனுடைய கண்களின் மீது ஒரு திரையை அமைத்து விடுகின்றார். கடவுள்-ன் இத்தகையதொரு தீர்மானத்திற்குப் பின், எவர் அவனை வழிநடத்த இயலும்? நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டீர்களா?

[45:22] வானங்கள் மற்றும் பூமியை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே கடவுள் படைத்தார், சிறிதளவும் அநீதமின்றி,* ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது சம்பாதித்தவற்றிற்கான கூலியைக் கொடுப்பதற்காக.

[45:24] அவர்கள், “இந்த வாழ்வு மட்டுமே நாம் வாழ்கின்றோம்; நாம் வாழ்கின்றோம் மேலும் மரணிக்கின்றோம், மேலும் காலம்தான் நம்முடைய மரணத்திற்குக் காரணமா கின்றது!” என்று கூறினார்கள். இதனைப் பற்றிய உறுதியான அறிவு எதுவும் அவர்களுக்கு கிடையாது; அவர்கள் கற்பனை மட்டுமே செய்கின்றனர்.