Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 45:22 — மண்டியிடுதல்

وَخَلَقَ اللَّهُ السَّمٰوٰتِ وَالأَرضَ بِالحَقِّ وَلِتُجزىٰ كُلُّ نَفسٍ بِما كَسَبَت وَهُم لا يُظلَمونَ

வானங்கள் மற்றும் பூமியை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே கடவுள் படைத்தார், சிறிதளவும் அநீதமின்றி,* ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது சம்பாதித்தவற்றிற்கான கூலியைக் கொடுப்பதற்காக.

[45:21] தீய செயல்களைப் புரிபவர்கள், நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களை நடத்துவது போன்ற அதே விதமாக அவர்களையும் நாம் நடத்துவோம் என்று எதிர்பார்க்கின்றனரா? அவர்களுடைய வாழ்வும் மற்றும் அவர்களுடைய மரணமும் ஒரே மாதிரி இருக்க முடியுமா?* உண்மையில் அவர்களுடைய தீர்ப்பு தவறானதாக இருக்கின்றது.

[45:23] தன்னுடைய அகந்தையையே தெய்வமாகக் கொண்ட ஒருவனை நீர் கவனித்திருக்கின்றீரா? அதன் விளைவாக, அவனுக்கு அறிவு இருந்த போதிலும், கடவுள் அவனை வழிகேட்டில் அனுப்பி, அவனுடைய செவிப்புலனிலும், அவனுடைய மனதிலும் முத்திரையிடுகின்றார், மேலும் அவனுடைய கண்களின் மீது ஒரு திரையை அமைத்து விடுகின்றார். கடவுள்-ன் இத்தகையதொரு தீர்மானத்திற்குப் பின், எவர் அவனை வழிநடத்த இயலும்? நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டீர்களா?