குர்ஆன் 45:26 — மண்டியிடுதல்
“கடவுள் உங்களுக்கு வாழ்வை வழங்கினார், பின்னர் அவர் உங்களை மரணத்தில் ஆழ்த்து கின்றார், பின்னர் தவிர்த்து விட முடியாதவாறு, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுகின்ற நாள் அன்று உங்களை அவர் ஒன்று கூட்டுவார். ஆனால் அதிகமான மக்கள் அறியமாட்டார் கள்” என்று கூறுவீராக.
[45:25] நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம், தெளிவாக எடுத்துரைக்கப்பட்டால், அவர்களு டைய ஒரே வாதமாவது, “நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால், எங்கள் முன்னோர் களைக் கொண்டு வாருங்கள்” என்று கூறுவதாகவே இருந்தது.
[45:27] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அனைத்தும் கடவுள்-க்குரியது. அந்த நேரம் (தீர்ப்பு) நிகழ்ந்தேறும் அந்நாள், அப்போது தான் பொய்ப்பிப்பவர்கள் நஷ்டமடைவார்கள்.