குர்ஆன் 46:22 — மணற்குன்றுகள்
அவர்கள், “எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திசை திருப்புவதற்காக நீர் வந்திருக்கின்றீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துகின்றதை (அத் தண்டனையை) கொண்டு வருமாறு நாங்கள் சவால் விடுகின்றோம்” என்று கூறினார்கள்.
[46:21] ஆதுகளின் சகோதரர் மணற்குன்றுகளில் தன் சமூகத்தாரை எச்சரித்ததை நினைவு கூர்வீராக - அவருக்கு முன்னரும் மற்றும் அவருக்குப் பின்னரும் எண்ணற்ற எச்சரிக்கைகள் வழங்கப் பட்டன: “கடவுள்-ஐத் தவிர நீங்கள் வழிபட வேண்டாம். மகத்தானதொரு நாளின் தண்டனையை உங்களுக்கு நான் அஞ்சுகின்றேன்”.
[46:23] அவர், “இதனைப் பற்றிய அறிவு கடவுள் வசம் உள்ளது; எதனை ஒப்படைக்க நான் அனுப்பப் பட்டேனோ அதனை மட்டுமே நான் உங்களிடம் ஒப்படைக்கின்றேன். இருந்த போதிலும், அறிவில்லாத மக்களாகவே நான் உங்களைக் காண்கின்றேன்” என்று கூறினார்.