குர்ஆன் 46:23 — மணற்குன்றுகள்
அவர், “இதனைப் பற்றிய அறிவு கடவுள் வசம் உள்ளது; எதனை ஒப்படைக்க நான் அனுப்பப் பட்டேனோ அதனை மட்டுமே நான் உங்களிடம் ஒப்படைக்கின்றேன். இருந்த போதிலும், அறிவில்லாத மக்களாகவே நான் உங்களைக் காண்கின்றேன்” என்று கூறினார்.
[46:22] அவர்கள், “எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திசை திருப்புவதற்காக நீர் வந்திருக்கின்றீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துகின்றதை (அத் தண்டனையை) கொண்டு வருமாறு நாங்கள் சவால் விடுகின்றோம்” என்று கூறினார்கள்.
[46:24] புயல் அவர்களை நோக்கி வருவதை அவர்கள் கண்டபோது, அவர்கள், “நமக்கு மிகவும் தேவைப் படுகின்ற மழையை இந்தப் புயல் கொண்டு வரும்” என்று கூறினார்கள். மாறாக, (ஹூதிடம்) நீங்கள் கொண்டு வருமாறு சவால் விடுத்தது இதுதான்; வலி நிறைந்த தண்டனையை தன்னில் கொண்டுள்ள உக்கிரமான காற்று.