Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 46:24 — மணற்குன்றுகள்

புயல் அவர்களை நோக்கி வருவதை அவர்கள் கண்டபோது, அவர்கள், “நமக்கு மிகவும் தேவைப் படுகின்ற மழையை இந்தப் புயல் கொண்டு வரும்” என்று கூறினார்கள். மாறாக, (ஹூதிடம்) நீங்கள் கொண்டு வருமாறு சவால் விடுத்தது இதுதான்; வலி நிறைந்த தண்டனையை தன்னில் கொண்டுள்ள உக்கிரமான காற்று.

[46:23] அவர், “இதனைப் பற்றிய அறிவு கடவுள் வசம் உள்ளது; எதனை ஒப்படைக்க நான் அனுப்பப் பட்டேனோ அதனை மட்டுமே நான் உங்களிடம் ஒப்படைக்கின்றேன். இருந்த போதிலும், அறிவில்லாத மக்களாகவே நான் உங்களைக் காண்கின்றேன்” என்று கூறினார்.

[46:25] தன்னுடைய இரட்சகரின் கட்டளைப்படி, எல்லா வற்றையும் அது அழித்தது. அதிகாலையில், அவர்களுடைய வீடுகளைத் தவிர எதுவும் நிற்கவில்லை. குற்றவாளிகளான மக்களுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுக்கின்றோம்.