குர்ஆன் 46:25 — மணற்குன்றுகள்
தன்னுடைய இரட்சகரின் கட்டளைப்படி, எல்லா வற்றையும் அது அழித்தது. அதிகாலையில், அவர்களுடைய வீடுகளைத் தவிர எதுவும் நிற்கவில்லை. குற்றவாளிகளான மக்களுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுக்கின்றோம்.
[46:24] புயல் அவர்களை நோக்கி வருவதை அவர்கள் கண்டபோது, அவர்கள், “நமக்கு மிகவும் தேவைப் படுகின்ற மழையை இந்தப் புயல் கொண்டு வரும்” என்று கூறினார்கள். மாறாக, (ஹூதிடம்) நீங்கள் கொண்டு வருமாறு சவால் விடுத்தது இதுதான்; வலி நிறைந்த தண்டனையை தன்னில் கொண்டுள்ள உக்கிரமான காற்று.
[46:26] உங்களை நாம் நிலை நிறுத்திய அதே விதமாக வே அவர்களையும் நாம் நிலைநிறுத்தியிருந்தோம், மேலும் அவர்களுக்குச் செவிப்புலன்களையும், கண்களையும், மேலும் மனங்களையும் வழங்கி னோம். ஆனால் அவர்களுடைய செவிப்புலன் களும், கண்களும், மேலும் மனங்களும் அவர்களுக்கு எவ்வகையிலும் உதவிட வில்லை. இது ஏனெனில், கடவுள்-ன் வெளிப்பாடுகளை புறக்கணிப்பதென அவர்கள் தீர்மானித்திருந்தனர். இவ்விதமாக, அவர்கள் கேலி செய்த முன்னறிவிப்புகளும் மற்றும் எச்சரிக்கைகளும் அவர்களுடைய அழிவிற்குக் காரணமாயின.