குர்ஆன் 46:26 — மணற்குன்றுகள்
وَلَقَد مَكَّنّٰهُم فيما إِن مَكَّنّٰكُم فيهِ وَجَعَلنا لَهُم سَمعًا وَأَبصٰرًا وَأَفـِٔدَةً فَما أَغنىٰ عَنهُم سَمعُهُم وَلا أَبصٰرُهُم وَلا أَفـِٔدَتُهُم مِن شَيءٍ إِذ كانوا يَجحَدونَ بِـٔايٰتِ اللَّهِ وَحاقَ بِهِم ما كانوا بِهِ يَستَهزِءونَ
உங்களை நாம் நிலை நிறுத்திய அதே விதமாக வே அவர்களையும் நாம் நிலைநிறுத்தியிருந்தோம், மேலும் அவர்களுக்குச் செவிப்புலன்களையும், கண்களையும், மேலும் மனங்களையும் வழங்கி னோம். ஆனால் அவர்களுடைய செவிப்புலன் களும், கண்களும், மேலும் மனங்களும் அவர்களுக்கு எவ்வகையிலும் உதவிட வில்லை. இது ஏனெனில், கடவுள்-ன் வெளிப்பாடுகளை புறக்கணிப்பதென அவர்கள் தீர்மானித்திருந்தனர். இவ்விதமாக, அவர்கள் கேலி செய்த முன்னறிவிப்புகளும் மற்றும் எச்சரிக்கைகளும் அவர்களுடைய அழிவிற்குக் காரணமாயின.
[46:25] தன்னுடைய இரட்சகரின் கட்டளைப்படி, எல்லா வற்றையும் அது அழித்தது. அதிகாலையில், அவர்களுடைய வீடுகளைத் தவிர எதுவும் நிற்கவில்லை. குற்றவாளிகளான மக்களுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுக்கின்றோம்.
[46:27] அவர்கள் வருந்தித்திருந்தக்கூடும் என்பதற்காக, சான்றுகளை நாம் விவரித்த பின்னரே, உங்களைச் சூழ்ந்திருந்த பல சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம்.