குர்ஆன் 46:27 — மணற்குன்றுகள்
அவர்கள் வருந்தித்திருந்தக்கூடும் என்பதற்காக, சான்றுகளை நாம் விவரித்த பின்னரே, உங்களைச் சூழ்ந்திருந்த பல சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம்.
[46:26] உங்களை நாம் நிலை நிறுத்திய அதே விதமாக வே அவர்களையும் நாம் நிலைநிறுத்தியிருந்தோம், மேலும் அவர்களுக்குச் செவிப்புலன்களையும், கண்களையும், மேலும் மனங்களையும் வழங்கி னோம். ஆனால் அவர்களுடைய செவிப்புலன் களும், கண்களும், மேலும் மனங்களும் அவர்களுக்கு எவ்வகையிலும் உதவிட வில்லை. இது ஏனெனில், கடவுள்-ன் வெளிப்பாடுகளை புறக்கணிப்பதென அவர்கள் தீர்மானித்திருந்தனர். இவ்விதமாக, அவர்கள் கேலி செய்த முன்னறிவிப்புகளும் மற்றும் எச்சரிக்கைகளும் அவர்களுடைய அழிவிற்குக் காரணமாயின.
[46:28] கடவுள்-க்கு நெருக்கமாக அவர்களைக் கொண்டு செல்ல அவர்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்கள் ஏன் அப்போது அவர்களுக்கு உதவி செய்யத் தவறி விட்டன? மாறாக, அவை அவர்களைக் கைவிட்டு விட்டன. அவர்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்த போலித் தெய்வங்கள் இத்தகையதாகவே இருந்தன; அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்ட புதுமைகள் இத்தகையதாகவே இருந்தன.