Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 46:28 — மணற்குன்றுகள்

கடவுள்-க்கு நெருக்கமாக அவர்களைக் கொண்டு செல்ல அவர்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்கள் ஏன் அப்போது அவர்களுக்கு உதவி செய்யத் தவறி விட்டன? மாறாக, அவை அவர்களைக் கைவிட்டு விட்டன. அவர்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்த போலித் தெய்வங்கள் இத்தகையதாகவே இருந்தன; அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்ட புதுமைகள் இத்தகையதாகவே இருந்தன.

[46:27] அவர்கள் வருந்தித்திருந்தக்கூடும் என்பதற்காக, சான்றுகளை நாம் விவரித்த பின்னரே, உங்களைச் சூழ்ந்திருந்த பல சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம்.

[46:29] குர்ஆனை அவர்கள் செவியேற்கும் பொருட்டு, பல ஜின்களை நாம் உம்மிடம் வழி நடத்தினோம் என்பதை நினைவு கூர்வீராக. அவை அங்கு வந்து சேர்ந்தவுடன், அவை, “கவனித்துக் கேளுங்கள்” என்று கூறின. அது முடிவடைந்து விட்டவுடன், எச்சரித்தவாறு, அவை தம் சமூகத்தாரிடம் விரைந்தன.*