குர்ஆன் 46:29 — மணற்குன்றுகள்
وَإِذ صَرَفنا إِلَيكَ نَفَرًا مِنَ الجِنِّ يَستَمِعونَ القُرءانَ فَلَمّا حَضَروهُ قالوا أَنصِتوا ۖ فَلَمّا قُضِىَ وَلَّوا إِلىٰ قَومِهِم مُنذِرينَ
குர்ஆனை அவர்கள் செவியேற்கும் பொருட்டு, பல ஜின்களை நாம் உம்மிடம் வழி நடத்தினோம் என்பதை நினைவு கூர்வீராக. அவை அங்கு வந்து சேர்ந்தவுடன், அவை, “கவனித்துக் கேளுங்கள்” என்று கூறின. அது முடிவடைந்து விட்டவுடன், எச்சரித்தவாறு, அவை தம் சமூகத்தாரிடம் விரைந்தன.*
[46:28] கடவுள்-க்கு நெருக்கமாக அவர்களைக் கொண்டு செல்ல அவர்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்கள் ஏன் அப்போது அவர்களுக்கு உதவி செய்யத் தவறி விட்டன? மாறாக, அவை அவர்களைக் கைவிட்டு விட்டன. அவர்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்த போலித் தெய்வங்கள் இத்தகையதாகவே இருந்தன; அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்ட புதுமைகள் இத்தகையதாகவே இருந்தன.
[46:30] அவை கூறின, “எங்கள் சமூகத்தாரே, மோஸஸிற்குப் பின்னர் வெளிப்படுத்தப்பட்ட, மேலும் முந்திய வேதங்களை மெய்ப்பிக்கின்ற ஒரு புத்தகத்தை நாங்கள் செவியேற்றோம். அது சத்தியத்தின் பால் வழிநடத்துகின்றது; சரியான பாதையின் பால்.