குர்ஆன் 46:30 — மணற்குன்றுகள்
அவை கூறின, “எங்கள் சமூகத்தாரே, மோஸஸிற்குப் பின்னர் வெளிப்படுத்தப்பட்ட, மேலும் முந்திய வேதங்களை மெய்ப்பிக்கின்ற ஒரு புத்தகத்தை நாங்கள் செவியேற்றோம். அது சத்தியத்தின் பால் வழிநடத்துகின்றது; சரியான பாதையின் பால்.
[46:29] குர்ஆனை அவர்கள் செவியேற்கும் பொருட்டு, பல ஜின்களை நாம் உம்மிடம் வழி நடத்தினோம் என்பதை நினைவு கூர்வீராக. அவை அங்கு வந்து சேர்ந்தவுடன், அவை, “கவனித்துக் கேளுங்கள்” என்று கூறின. அது முடிவடைந்து விட்டவுடன், எச்சரித்தவாறு, அவை தம் சமூகத்தாரிடம் விரைந்தன.*
[46:31] “எங்கள் சமூகத்தாரே, கடவுள்-ன் அழைப்பிற்கு மறுமொழியளியுங்கள், மேலும் அவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அப்போது உங்களு டைய பாவங்களை அவர் மன்னிப்பார், மேலும் வலிநிறைந்ததொரு தண்டனையிலிருந்து உங்களைக் காப்பாற்றி விடுவார்”.