குர்ஆன் 46:31 — மணற்குன்றுகள்
“எங்கள் சமூகத்தாரே, கடவுள்-ன் அழைப்பிற்கு மறுமொழியளியுங்கள், மேலும் அவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அப்போது உங்களு டைய பாவங்களை அவர் மன்னிப்பார், மேலும் வலிநிறைந்ததொரு தண்டனையிலிருந்து உங்களைக் காப்பாற்றி விடுவார்”.
[46:30] அவை கூறின, “எங்கள் சமூகத்தாரே, மோஸஸிற்குப் பின்னர் வெளிப்படுத்தப்பட்ட, மேலும் முந்திய வேதங்களை மெய்ப்பிக்கின்ற ஒரு புத்தகத்தை நாங்கள் செவியேற்றோம். அது சத்தியத்தின் பால் வழிநடத்துகின்றது; சரியான பாதையின் பால்.
[46:32] கடவுள்-ன் அழைப்பிற்கு மறுமொழியளிக்கத் தவறிவிட்டவர்கள் தப்பித்து விட முடியாது, மேலும் அவரை விடுத்து வேறு இரட்சகர் எவரும் இருக்க மாட்டார்; அவர்கள் வழிகேட்டில் வெகு தூரம் சென்று விட்டனர்.