குர்ஆன் 46:32 — மணற்குன்றுகள்
கடவுள்-ன் அழைப்பிற்கு மறுமொழியளிக்கத் தவறிவிட்டவர்கள் தப்பித்து விட முடியாது, மேலும் அவரை விடுத்து வேறு இரட்சகர் எவரும் இருக்க மாட்டார்; அவர்கள் வழிகேட்டில் வெகு தூரம் சென்று விட்டனர்.
[46:31] “எங்கள் சமூகத்தாரே, கடவுள்-ன் அழைப்பிற்கு மறுமொழியளியுங்கள், மேலும் அவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அப்போது உங்களு டைய பாவங்களை அவர் மன்னிப்பார், மேலும் வலிநிறைந்ததொரு தண்டனையிலிருந்து உங்களைக் காப்பாற்றி விடுவார்”.
[46:33] சிறிதளவும் சிரமமின்றி வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த கடவுள், இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க ஆற்றலுள்ளவராக இருக்கின்றார் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ளவில்லையா? ஆம், உண்மையில்; அவர் சர்வ சக்தியுடையவராக இருக்கின்றார்.