குர்ஆன் 46:33 — மணற்குன்றுகள்
சிறிதளவும் சிரமமின்றி வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த கடவுள், இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க ஆற்றலுள்ளவராக இருக்கின்றார் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ளவில்லையா? ஆம், உண்மையில்; அவர் சர்வ சக்தியுடையவராக இருக்கின்றார்.
[46:32] கடவுள்-ன் அழைப்பிற்கு மறுமொழியளிக்கத் தவறிவிட்டவர்கள் தப்பித்து விட முடியாது, மேலும் அவரை விடுத்து வேறு இரட்சகர் எவரும் இருக்க மாட்டார்; அவர்கள் வழிகேட்டில் வெகு தூரம் சென்று விட்டனர்.
[46:34] நம்ப மறுப்பவர்களை நரக நெருப்பிற்கு அறிமுகப்படுத்தப்படுகின்ற அந்நாளில், அவர் களிடம், “இது சத்தியம்தான் அல்லவா?” என்று கேட்கப்படும். அவர்கள், “ஆம், உண்மையில், எங்கள் இரட்சகர் மீது ஆணையாக” என்று பதிலளிப்பார்கள். அவர், “அப்படியென்றால் உங்களுடைய நம்பிக்கையின்மைக்காக தண்டனையை அனுபவியுங்கள்” என்று கூறுவார்.