Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 46:34 — மணற்குன்றுகள்

நம்ப மறுப்பவர்களை நரக நெருப்பிற்கு அறிமுகப்படுத்தப்படுகின்ற அந்நாளில், அவர் களிடம், “இது சத்தியம்தான் அல்லவா?” என்று கேட்கப்படும். அவர்கள், “ஆம், உண்மையில், எங்கள் இரட்சகர் மீது ஆணையாக” என்று பதிலளிப்பார்கள். அவர், “அப்படியென்றால் உங்களுடைய நம்பிக்கையின்மைக்காக தண்டனையை அனுபவியுங்கள்” என்று கூறுவார்.

[46:33] சிறிதளவும் சிரமமின்றி வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த கடவுள், இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க ஆற்றலுள்ளவராக இருக்கின்றார் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ளவில்லையா? ஆம், உண்மையில்; அவர் சர்வ சக்தியுடையவராக இருக்கின்றார்.

[46:35] ஆகையால், பொறுமையை மேற்கொண்டிருந்த உமக்கு முந்திய உறுதி வாய்ந்த தூதர்களைப் போல் பொறுமையுடன் இருப்பீராக. தவிர்த்து விட முடியாதவாறு அவர்களிடம் வர இருக்கின்ற தண்டனையைக் காண அவசரப்படாதீர். அவர்கள் அதனைக் காணும் அந்நாளில், நாளின் ஒரு மணி நேரமே அவர்கள் வாழ்ந்திருந்ததைப் போல் தோன்றும். இது ஒரு பிரகடனமாகும்: தொடர்ந்து அழிக்கப்படுபவர்கள் தீயவர்கள் தான் அல்லவா?