குர்ஆன் 46:4 — மணற்குன்றுகள்
“கடவுள்-உடன் நீங்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்களைச் சிந்தித்துப் பாருங் கள். பூமியின் மீது அவை எதனை படைத் திருக்கின்றன என்பதை எனக்குக் காட்டு ங்கள். வானங்களில் ஒரு பங்கை அவை சொந்த மாகக் கொண்டிருக்கின்றனவா? இதற்கு முந்திய வேதம் வேறு எதையேனுமோ, அல்லது உங்களுடைய இணைவழிபாட்டிற்கு ஆதர வளிக்கும் நிரூபிக்கப்பட்ட அறிவின் ஏதேனும் பகுதியையோ, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எனக்குக் காட்டுங்கள்” என்று கூறுவீராக.
[46:3] வானங்களையும் மற்றும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும், மேலும் வரையறுக்கப்பட்டதொரு தவணைக்காகவுமே அன்றி நாம் படைக்கவில்லை. நம்ப மறுப் பவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் முற்றிலும் கவனமற்றவர் களாகவே இருக்கின்றார்கள்.
[46:5] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை அவர்களுக்கு ஒருபோதும் மறுமொழியளிக்க முடியாத, மேலும் அவர்கள் வழிபடுவதைக் குறித்து முற்றிலும் அறியாதிருக்கின்ற இணைத்தெய்வங்களைக் கடவுள்-உடன் வழிபடுகின்றவர்களை விட, வழிகேட்டில் வெகு தூரம் இருப்பவர்கள் யார்?