Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 46:5 — மணற்குன்றுகள்

وَمَن أَضَلُّ مِمَّن يَدعوا مِن دونِ اللَّهِ مَن لا يَستَجيبُ لَهُ إِلىٰ يَومِ القِيٰمَةِ وَهُم عَن دُعائِهِم غٰفِلونَ

மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை அவர்களுக்கு ஒருபோதும் மறுமொழியளிக்க முடியாத, மேலும் அவர்கள் வழிபடுவதைக் குறித்து முற்றிலும் அறியாதிருக்கின்ற இணைத்தெய்வங்களைக் கடவுள்-உடன் வழிபடுகின்றவர்களை விட, வழிகேட்டில் வெகு தூரம் இருப்பவர்கள் யார்?

[46:4] “கடவுள்-உடன் நீங்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்களைச் சிந்தித்துப் பாருங் கள். பூமியின் மீது அவை எதனை படைத் திருக்கின்றன என்பதை எனக்குக் காட்டு ங்கள். வானங்களில் ஒரு பங்கை அவை சொந்த மாகக் கொண்டிருக்கின்றனவா? இதற்கு முந்திய வேதம் வேறு எதையேனுமோ, அல்லது உங்களுடைய இணைவழிபாட்டிற்கு ஆதர வளிக்கும் நிரூபிக்கப்பட்ட அறிவின் ஏதேனும் பகுதியையோ, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எனக்குக் காட்டுங்கள்” என்று கூறுவீராக.

[46:6] மேலும் (தீர்ப்பு நாளன்று) மக்கள் ஒன்று கூட்டப்படும் பொழுது, அவர்களுடைய இணைத்தெய்வங்கள் அவர்களுடைய விரோதிகளாக ஆகி விடுவார்கள், மேலும் அவர் களுடைய இணைவழிபாட்டினைப்* பழித்துக் கூறுவார்கள்.