குர்ஆன் 46:6 — மணற்குன்றுகள்
மேலும் (தீர்ப்பு நாளன்று) மக்கள் ஒன்று கூட்டப்படும் பொழுது, அவர்களுடைய இணைத்தெய்வங்கள் அவர்களுடைய விரோதிகளாக ஆகி விடுவார்கள், மேலும் அவர் களுடைய இணைவழிபாட்டினைப்* பழித்துக் கூறுவார்கள்.
[46:5] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை அவர்களுக்கு ஒருபோதும் மறுமொழியளிக்க முடியாத, மேலும் அவர்கள் வழிபடுவதைக் குறித்து முற்றிலும் அறியாதிருக்கின்ற இணைத்தெய்வங்களைக் கடவுள்-உடன் வழிபடுகின்றவர்களை விட, வழிகேட்டில் வெகு தூரம் இருப்பவர்கள் யார்?
[46:7] நம்முடைய வெளிப்பாடுகள் முற்றிலும் தெளி வாக, அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்ட பொழுது, தங்களிடம் வந்த சத்தியத்தைக் குறித்து நம்ப மறுப்பவர்கள், “இது கண்கூடான மாயாஜாலமேயாகும்!” என்று கூறினார்கள்.