குர்ஆன் 46:9 — மணற்குன்றுகள்
“மற்றத் தூதர்களிலிருந்து நான் வேறுபட்டவர் அல்ல. எனக்கோ அல்லது உங்களுக்கோ என்ன நிகழும் என்பது குறித்து எனக்கு அறிவு எதுவும் கிடையாது. எனக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். நான் ஆழ்ந்ததொரு எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை” என்று கூறுவீராக.
[46:8] “இதனை அவர் இட்டுக் கட்டிக் கொண்டார்,” என்று அவர்கள் கூறும்போது, “இதனை நான் இட்டுக் கட்டிக் கொண்டிருப்பேனாயின், பின்னர் கடவுள்-இடமிருந்து என்னைக் காக்க உங்களால் இயலாது. நீங்கள் செய்கின்ற சூழ்ச்சி ஒவ்வொன் றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார். எனக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு சாட்சியாக அவர் போதுமானவர். அவர்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று கூறுவீராக.
[46:10] “கடவுள்-இடமிருந்து இது வந்திருந்து இதனை நீங்கள் நிராகரித்து விட்டால் உங்கள் நிலை என்ன? இஸ்ரவேலின் சந்ததியினரிலிருந்து ஒரு சாட்சி இதைப் போன்றதொரு அற்புத நிகழ்விற்குச்* சாட்சியம் அளித்துள்ளார், மேலும் அவர் நம்பிக்கை கொண்டார், அதே சமயம் நீங்கள் ஆணவம் கொண்டீர்கள். நிச்சயமாக, பாவிகளான சமூகத்தைக் கடவுள் வழிநடத்த மாட்டார்” என்று கூறுவீராக.