குர்ஆன் 46:10 — மணற்குன்றுகள்
“கடவுள்-இடமிருந்து இது வந்திருந்து இதனை நீங்கள் நிராகரித்து விட்டால் உங்கள் நிலை என்ன? இஸ்ரவேலின் சந்ததியினரிலிருந்து ஒரு சாட்சி இதைப் போன்றதொரு அற்புத நிகழ்விற்குச்* சாட்சியம் அளித்துள்ளார், மேலும் அவர் நம்பிக்கை கொண்டார், அதே சமயம் நீங்கள் ஆணவம் கொண்டீர்கள். நிச்சயமாக, பாவிகளான சமூகத்தைக் கடவுள் வழிநடத்த மாட்டார்” என்று கூறுவீராக.
[46:9] “மற்றத் தூதர்களிலிருந்து நான் வேறுபட்டவர் அல்ல. எனக்கோ அல்லது உங்களுக்கோ என்ன நிகழும் என்பது குறித்து எனக்கு அறிவு எதுவும் கிடையாது. எனக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். நான் ஆழ்ந்ததொரு எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை” என்று கூறுவீராக.
[46:11] நம்ப மறுப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி, “இது ஏதேனும் நல்லதாக இருந்திருந்தால், எங்களுக்கு முன்னர் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள். ஏனெனில் அவர்கள் அதன்பால் வழிநடத்தப் படாததால், அவர்கள், “இது பழமையானதொரு இட்டுக்கட்டலே ஆகும்!” என்று கூறினார்கள்.