குர்ஆன் 46:11 — மணற்குன்றுகள்
நம்ப மறுப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி, “இது ஏதேனும் நல்லதாக இருந்திருந்தால், எங்களுக்கு முன்னர் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள். ஏனெனில் அவர்கள் அதன்பால் வழிநடத்தப் படாததால், அவர்கள், “இது பழமையானதொரு இட்டுக்கட்டலே ஆகும்!” என்று கூறினார்கள்.
[46:10] “கடவுள்-இடமிருந்து இது வந்திருந்து இதனை நீங்கள் நிராகரித்து விட்டால் உங்கள் நிலை என்ன? இஸ்ரவேலின் சந்ததியினரிலிருந்து ஒரு சாட்சி இதைப் போன்றதொரு அற்புத நிகழ்விற்குச்* சாட்சியம் அளித்துள்ளார், மேலும் அவர் நம்பிக்கை கொண்டார், அதே சமயம் நீங்கள் ஆணவம் கொண்டீர்கள். நிச்சயமாக, பாவிகளான சமூகத்தைக் கடவுள் வழிநடத்த மாட்டார்” என்று கூறுவீராக.
[46:12] இதற்கு முன்னர், மோஸஸின் புத்தகம் வழிகாட்ட லையும் மேலும் கருணையையும் வழங்கியது. இதுவும் மெய்ப்பிக்கின்றதொரு வேதமாகும், வரம்பு மீறியவர்களை எச்சரிப்பதற்காகவும், மேலும் நன்னெறியாளர்களுக்கு நற்செய்தி தருவதற் காகவும் அரபி மொழியிலானதாகும்.