Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 46:12 — மணற்குன்றுகள்

இதற்கு முன்னர், மோஸஸின் புத்தகம் வழிகாட்ட லையும் மேலும் கருணையையும் வழங்கியது. இதுவும் மெய்ப்பிக்கின்றதொரு வேதமாகும், வரம்பு மீறியவர்களை எச்சரிப்பதற்காகவும், மேலும் நன்னெறியாளர்களுக்கு நற்செய்தி தருவதற் காகவும் அரபி மொழியிலானதாகும்.

[46:11] நம்ப மறுப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி, “இது ஏதேனும் நல்லதாக இருந்திருந்தால், எங்களுக்கு முன்னர் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள். ஏனெனில் அவர்கள் அதன்பால் வழிநடத்தப் படாததால், அவர்கள், “இது பழமையானதொரு இட்டுக்கட்டலே ஆகும்!” என்று கூறினார்கள்.

[46:13] நிச்சயமாக, “கடவுள் தான் எங்கள் இரட்சகர்,” என்று கூறி, பின்னர் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களுக்கு அச்சம் எதுவும் இருக்காது, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.