குர்ஆன் 46:13 — மணற்குன்றுகள்
நிச்சயமாக, “கடவுள் தான் எங்கள் இரட்சகர்,” என்று கூறி, பின்னர் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களுக்கு அச்சம் எதுவும் இருக்காது, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
[46:12] இதற்கு முன்னர், மோஸஸின் புத்தகம் வழிகாட்ட லையும் மேலும் கருணையையும் வழங்கியது. இதுவும் மெய்ப்பிக்கின்றதொரு வேதமாகும், வரம்பு மீறியவர்களை எச்சரிப்பதற்காகவும், மேலும் நன்னெறியாளர்களுக்கு நற்செய்தி தருவதற் காகவும் அரபி மொழியிலானதாகும்.
[46:14] அவர்கள் சுவனத்திற்குத் தகுதிபெற்று விட்டார் கள், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப் பார்கள்; அவர்களுடைய காரியங்களுக்கோர் வெகுமதி.