Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 46:14 — மணற்குன்றுகள்

அவர்கள் சுவனத்திற்குத் தகுதிபெற்று விட்டார் கள், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப் பார்கள்; அவர்களுடைய காரியங்களுக்கோர் வெகுமதி.

[46:13] நிச்சயமாக, “கடவுள் தான் எங்கள் இரட்சகர்,” என்று கூறி, பின்னர் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களுக்கு அச்சம் எதுவும் இருக்காது, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

[46:15] மனிதனை அவனுடைய பெற்றோரைக் கண்ணியப் படுத்துமாறு நாம் கட்டளையிட்டோம். அவனுடைய தாய் கஷ்டத்துடன் அவனைச் சுமந்தாள், கஷ்டத்துடன் அவனைப் பிரசவித்தாள், மேலும் முப்பது மாதங்கள் அவன் மீது தனிப்பட்ட கவனம் எடுத்துக் கொண்டாள். அவன் பக்குவ முதிர்ச்சி அடைந்ததோடு, மேலும் நாற்பது வயதை* அடைந்தவுடன், அவன், “என் இரட்சகரே, என் மீதும் என் பெற்றோர் மீதும் நீர் அளித்திருக்கின்ற அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும்படியும், மேலும் உமக்கு விருப்பமான நன்னெறியான காரியங்களைச் செய்யும்படியும் என்னை வழி நடத்துவீராக. அதுபோலவே என்னுடைய குழந்தைகளையும் நன்னெறியாளர்களாக இருக்கச் செய்வீராக. நான் உம்மிடம் வருந்தித்திருந்து கின்றேன்; நான் அடிபணிந்த ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறவேண்டும்.