குர்ஆன் 46:15 — மணற்குன்றுகள்
மனிதனை அவனுடைய பெற்றோரைக் கண்ணியப் படுத்துமாறு நாம் கட்டளையிட்டோம். அவனுடைய தாய் கஷ்டத்துடன் அவனைச் சுமந்தாள், கஷ்டத்துடன் அவனைப் பிரசவித்தாள், மேலும் முப்பது மாதங்கள் அவன் மீது தனிப்பட்ட கவனம் எடுத்துக் கொண்டாள். அவன் பக்குவ முதிர்ச்சி அடைந்ததோடு, மேலும் நாற்பது வயதை* அடைந்தவுடன், அவன், “என் இரட்சகரே, என் மீதும் என் பெற்றோர் மீதும் நீர் அளித்திருக்கின்ற அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும்படியும், மேலும் உமக்கு விருப்பமான நன்னெறியான காரியங்களைச் செய்யும்படியும் என்னை வழி நடத்துவீராக. அதுபோலவே என்னுடைய குழந்தைகளையும் நன்னெறியாளர்களாக இருக்கச் செய்வீராக. நான் உம்மிடம் வருந்தித்திருந்து கின்றேன்; நான் அடிபணிந்த ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறவேண்டும்.
[46:14] அவர்கள் சுவனத்திற்குத் தகுதிபெற்று விட்டார் கள், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப் பார்கள்; அவர்களுடைய காரியங்களுக்கோர் வெகுமதி.
[46:16] இவர்களிடமிருந்துதான் நன்னெறியான காரியங் களை நாம் ஏற்றுக் கொள்வோம், மேலும் அவர் களுடைய பாவங்களைப் பிழை பொறுத்துக் கொள் வோம். அவர்கள் சுவனத்திற்குத் தகுதிபெற்று விட்டனர். இதுவே அவர்களுக்கு வாக்களிக்கப் பட்டுள்ள சத்தியம் நிறைந்த வாக்குறுதியாகும்.