Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 46:16 — மணற்குன்றுகள்

இவர்களிடமிருந்துதான் நன்னெறியான காரியங் களை நாம் ஏற்றுக் கொள்வோம், மேலும் அவர் களுடைய பாவங்களைப் பிழை பொறுத்துக் கொள் வோம். அவர்கள் சுவனத்திற்குத் தகுதிபெற்று விட்டனர். இதுவே அவர்களுக்கு வாக்களிக்கப் பட்டுள்ள சத்தியம் நிறைந்த வாக்குறுதியாகும்.

[46:15] மனிதனை அவனுடைய பெற்றோரைக் கண்ணியப் படுத்துமாறு நாம் கட்டளையிட்டோம். அவனுடைய தாய் கஷ்டத்துடன் அவனைச் சுமந்தாள், கஷ்டத்துடன் அவனைப் பிரசவித்தாள், மேலும் முப்பது மாதங்கள் அவன் மீது தனிப்பட்ட கவனம் எடுத்துக் கொண்டாள். அவன் பக்குவ முதிர்ச்சி அடைந்ததோடு, மேலும் நாற்பது வயதை* அடைந்தவுடன், அவன், “என் இரட்சகரே, என் மீதும் என் பெற்றோர் மீதும் நீர் அளித்திருக்கின்ற அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும்படியும், மேலும் உமக்கு விருப்பமான நன்னெறியான காரியங்களைச் செய்யும்படியும் என்னை வழி நடத்துவீராக. அதுபோலவே என்னுடைய குழந்தைகளையும் நன்னெறியாளர்களாக இருக்கச் செய்வீராக. நான் உம்மிடம் வருந்தித்திருந்து கின்றேன்; நான் அடிபணிந்த ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறவேண்டும்.

[46:17] பின்னர் தன் பெற்றோரிடம் இவ்வாறு கூறுகின்ற ஒருவனும் இருக்கின்றான், “உங்களுக்குக் கேடுதான்; (மரணத்திற்குப் பின்) நான் மீண்டும் உயிர் பெறுவேன் என்று நீங்கள் என்னிடம் கூறுகின்றீர்களா? இவ்வாறென்றால் நமக்கு முன்னர் மரணித்தவர்கள் ஒருபோதும் திரும்பி வராதிருப்பது ஏன்?” அவனுடைய பெற்றோர்கள் கடவுள்-ன் உதவிக்காகக் கதறுவார்கள், மேலும், “உனக்குத்தான் கேடு; தயவு செய்து நம்பிக்கை கொள்! கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமான தாகும்” என்று கூறுவார்கள். அவன், “கடந்த காலத்தின் கட்டுக்கதைகள்!” என்று கூறுவான்.