குர்ஆன் 46:17 — மணற்குன்றுகள்
பின்னர் தன் பெற்றோரிடம் இவ்வாறு கூறுகின்ற ஒருவனும் இருக்கின்றான், “உங்களுக்குக் கேடுதான்; (மரணத்திற்குப் பின்) நான் மீண்டும் உயிர் பெறுவேன் என்று நீங்கள் என்னிடம் கூறுகின்றீர்களா? இவ்வாறென்றால் நமக்கு முன்னர் மரணித்தவர்கள் ஒருபோதும் திரும்பி வராதிருப்பது ஏன்?” அவனுடைய பெற்றோர்கள் கடவுள்-ன் உதவிக்காகக் கதறுவார்கள், மேலும், “உனக்குத்தான் கேடு; தயவு செய்து நம்பிக்கை கொள்! கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமான தாகும்” என்று கூறுவார்கள். அவன், “கடந்த காலத்தின் கட்டுக்கதைகள்!” என்று கூறுவான்.
[46:16] இவர்களிடமிருந்துதான் நன்னெறியான காரியங் களை நாம் ஏற்றுக் கொள்வோம், மேலும் அவர் களுடைய பாவங்களைப் பிழை பொறுத்துக் கொள் வோம். அவர்கள் சுவனத்திற்குத் தகுதிபெற்று விட்டனர். இதுவே அவர்களுக்கு வாக்களிக்கப் பட்டுள்ள சத்தியம் நிறைந்த வாக்குறுதியாகும்.
[46:18] ஜின்கள் மற்றும் மனிதர்களின் ஒவ்வொரு தலை முறைகளிலும் நம்ப மறுப்பவர்களென முத்திரை யிடப்பட்டவர்கள் இத்தகையவர்கள் தான்; அவர்கள் நஷ்டவாளிகள் ஆவார்கள்.